மோடி கற்றுக்கொள்வார்... ராகுல்? | Modi will recover, but Rahul? - Junior Vikatan | ஜூனியர் விகடன்

மோடி கற்றுக்கொள்வார்... ராகுல்?

டந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த பல்வேறு மாநிலங்களில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான மறுநாள், இந்திய செய்தித்தாள்கள் பெரும்பாலானவற்றில் முதல் பக்கத்தில் அந்தப் புகைப்படம் இருக்கும். சூழல் முழுக்கக் கொண்டாட்டமாக இருக்க, பி.ஜே.பி தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு பிரதமர் மோடி இனிப்பு ஊட்டும் காட்சியே அது. முதல்முறையாக அப்படிப்பட்ட புகைப்படம் ஏதுமில்லாமல் டிசம்பர் 12-ம் தேதி செய்தித்தாள்கள் வந்தன.

ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற தேர்தல்களில் பி.ஜே.பி பெரும் இழப்பைச் சந்தித்திருக்கிறது. அடுத்த ஆண்டு தொடக் கத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, மோடிக்கு எதிரான கட்சிகள் அணி திரள்வதற்கு ஒரு தலைமை தேவை; ஒரு பாதை தேவை. காங்கிரஸ் தலைமையில் அவர்கள் செல்லப்போகும் பாதைக்குத் தொடக்கப்புள்ளியாக இந்தத் தேர்தல் அமைந்திருக்கிறது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரப் பிரதேசத் தேர்தல் முடிவுகள் வெளியானபோது, ‘2019 நாடாளுமன்றத் தேர்தலை எதிர்க்கட்சிகள் மறந்துவிட வேண்டியதுதான். அந்தத் தேர்தலிலும் மோடி ஜெயிப்பதை யாராலும் தடுக்க முடியாது’ என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கூறியிருந்தார். ஆனால், இப்போது அப்படித் தீர்மானமாகச் சொல்ல முடியாது. மோடியின் தேர்தல் வியூகங்களும் பிரசார உத்திகளும் இந்தத் தேர்தலில் எந்தப் பலனையும் தரவில்லை. ஏற்கெனவே டெல்லியிலும் பீகாரிலும் பி.ஜே.பி தோல்வியைச் சந்தித்தது என்றாலும், அதில் நேரடியாக காங்கிரஸ் பலனடையவில்லை. முதல்முறையாக இப்போதுதான் அந்தக் கட்சி வெற்றியை ருசித்திருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick