“பழைய தீர்ப்புகளைக் கவனத்தில் கொண்டிருக்க வேண்டாமா?”

பதற்றத்தை அதிகரிக்கும் மேக்கேதாட்டூ விவகாரம்

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டூவில் அணை கட்டுவது தொடர்பான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயார் செய்வதற்குத் தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்திருப்பது தமிழக விவசாயிகளை கவலைகொள்ள வைத்துள்ளது. மேலும், காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்புகளைக் கணக்கில் கொள்ளாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக விமர்சனமும் எழுந்துள்ளது.

மேக்கேதாட்டூ அணை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க, கர்நாடக அரசுக்கு மத்திய நீர் ஆணையம் அளித்துள்ள அனுமதிக்குத் தடை விதிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு நவம்பர் 30-ம் தேதி மனுத் தாக்கல் செய்தது. இதை, டிசம்பர் 12-ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம், ‘மேக்கேதாட்டூ அணை கட்டுவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்குத் தடை விதிக்க முடியாது’ என்று உத்தரவில் கூறியது.

இந்த விவகாரம் குறித்து தமிழ்நாடு பொதுப் பணித்துறை மூத்த பொறியாளர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் வீரப்பன் நம்மிடம் கருத்து களைப் பகிர்ந்துகொண்டார்.

“ ‘திட்ட அறிக்கைதானே தயாரிக்கப் போகிறார் கள்... அணையையா கட்டப் போகிறார்கள்...’ என்று நீதிபதிகள் கேட்டிருக்கின்றனர். அணை கட்டுவதற்கு, எதிர்காலத்தில் தடை விதிக்க வாய்ப்பு உள்ளது என்கிறபோது, எதற்காக வரைவு திட்ட அறிக்கையைத் தயாரிக்க அனுமதி கொடுக்க வேண்டும்?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick