புயலில் சாய்ந்த தென்னை மரங்கள்... என்ன செய்ய வேண்டும் விவசாயிகள்?

ஜா புயலில் டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான தென்னை மரங்கள் சாய்ந்துவிட்ட நிலையில், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றனர் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள். அவர்களுக்கான தீர்வை சொல்கிறார் குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத் தலைவர் செந்தூர்குமரன்.

பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளைப் பற்றிய கவலையுடன் சின்னத்திரை இயக்குநர் திருச்செல்வம் ஜூ.வி-யைத் தொடர்புகொண்டார். “பேராவூரணி பகுதியில் தென்னை விவசாயிகள் அதிகளவு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். தோப்பில் சாய்ந்து நிற்கும் தென்னை மரங்களைக் காப்பாற்ற ஏதேனும் வழி இருக்கிறதா?” என்று கேட்டார் அவர்.

உடனே, குன்றக்குடி வேளாண் அறிவியல் மையத் தலைவர் மற்றும் பேராசிரியர் செந்தூர்குமரனை, பேராவூரணிப் பகுதிக்கு அழைத்துச் சென்றோம். பேராவூரணிக்கு அருகில் தென்னங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் நூற்றுக்கணக்கான தென்னை மரங்களைப் புயலுக்குக் காவுகொடுத்துவிட்டுக் கதிகலங்கித் தவிக்கிறார். அவர், ‘‘தென்னை மரங்கள்தான் எங்க குடும்பத்துக்கு ஓரே வாழ்வாதாரம். இனி, என்ன செய்யப்போறோம்னு தெரியலை. விழுந்து கிடக்குற மரங்களைக் கழிக்க ஆள்கூட கிடைக்கலை. கரன்ட் வர்றதுக்கு இன்னும் ஒரு மாசம் ஆகும்னு சொல்றாங்க...” என்று வெடித்து அழத்தொடங்கினார். அவருக்கு ஆறுதல் கூறி ஆசுவாசப்படுத்தினோம். இப்படி பாதிக்கப்பட்டுள்ள ராமகிருஷ்ணன், பாலசுப்ரமணி, பிரகதீஸ்வரன் ஆகிய தென்னை விவசாயிகளுக்கு செந்தூர்குமரன் ஆலோசனைகளை வழங்கினார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick