நாதியற்றுக் கிடக்கும் நந்தன் கால்வாய்!

நூற்றாண்டுப் போராட்டத்துக்கு நீதி கிடைக்குமா?

திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களின் நீர் ஆதாரத்துக்காக ஒரு நூற்றாண்டுக்கு முன்பு கொண்டுவரப்பட்டது, நந்தன் கால்வாய் திட்டம். இந்த இரண்டு மாவட்டங்களில் உள்ள 50 ஏரிகளின் நீர் ஆதாரமாக விளங்கும் நந்தன் கால்வாயைச் சீரமைத்துப் புனரமைக்க வேண்டும் என்ற விவசாயிகளின் நீண்டகால கோரிக்கை ஆட்சியாளர்களால் கண்டுகொள்ளப்படாமலே உள்ளது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை முதன்மைப் பொறியாளருக்கு செஞ்சி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மஸ்தான் கடிதம் எழுதியுள்ளார். அதில், ‘திருவண்ணாமலை மாவட்டம் சம்மந்தனூர் துரிஞ்சலாற்றின் குறுக்கே உள்ள கீரனூர் அணைக்கட்டில் இருந்து விழுப்புரம் மாவட்டம் பனமலை ஏரி வரையிலான சுமார் 37 கி.மீ தூரமுள்ள நந்தன் கால்வாய் முழுவதும் தூர்ந்துபோயுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைப் பொறுத்தவரை, பருவமழை பொய்த்துவிட்ட சூழலில் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஏரிகளும் வறண்டுள்ளன. சாத்தனூர் அணையில் இருந்து வெளியேறும் உபரிநீரை இடதுபுறக் கால்வாய் வழியாகத் திருப்பி நந்தன் கால்வாயை இணைத்தால், திருவண்ணாமலை மாவட்டத்தில் 14 ஏரிகளும் விழுப்புரம் மாவட்டத்தில் 36 ஏரிகளும் நிரம்பும். இதனால், இரண்டு மாவட்ட விவசாயிகளும் பயனடைவார்கள். எனவே, பொதுப்பணித் துறை முதன்மைப் பொறியாளர் இந்தத் திட்டத்தை ஆய்வுசெய்து தமிழக அரசுக்கு  அறிக்கை அனுப்ப வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick