ஜெயலலிதாவுக்கு கொடுத்த காபியில் பொட்டாஷியம்? | Controversy of Arumugasamy Commission Inquiry - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (19/12/2018)

ஜெயலலிதாவுக்கு கொடுத்த காபியில் பொட்டாஷியம்?

கேள்வி கேட்ட வழக்கறிஞர் ராஜினாமா...

றுமுகசாமி ஆணையத்தின் வழக்கறிஞராகப் பணியாற்றியவர் வழக்கறிஞர் பார்த்தசாரதி. விசாரணையின்போது, ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான குளறுபடிகளை வெளிச்சம்போட்டுக் காட்டியவர். இவர், திடீரென்று ஆணையத்திலிருந்து கடந்த 14-ம் தேதி ராஜினாமா செய்துவிட்டார். `அரசியல் அழுத்தம் காரணமாகவே அவர் பதவி விலகினார்’ என்கிறார்கள் ஆணையத்தின் ஊழியர்கள்.

இதுதொடர்பாக ஆணையத்தின் சட்ட விவகாரங்களைக் கவனிக்கும் பணியாளர் ஒருவர், ``ஜெயலலிதாவின் மருத்துவச் சிகிச்சையில் விதிமுறைகள் மீறப்பட்டனவா என்பதை வெளிக்கொண்டுவருவதில் முனைப்புடன் செயல்பட்டவர் பார்த்தசாரதி. சிகிச்சை முறைகளில், `திட்டமிட்டு இது நடந்திருக்குமா?’ என்ற கோணத்தில் தனிப்பட்ட முறையில் மருத்துவர்களிடமும் விளக்கம் கேட்டார். அப்போது ஒரு மருத்துவர் ‘இதய முடக்கம் ஏற்படும் அளவுக்கு ஜெயலலிதாவின் ரத்தத்தில் பொட்டாஷியம் அளவு கூடியிருக்கிறது’ என்று  தெரிவித்திருக்கிறார். ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு வந்த பிறகு எடுக்கப்பட்ட சோதனையிலும், பொட்டாஷியம் அளவு 6 மில்லி மால் அளவுக்கு உயர்ந்திருப்பது தெரியவந்தது. மனித உடலில் பொட்டாஷியம் 5.4 மில்லி மால் அளவு மட்டுமே இருக்க வேண்டும். 6 மில்லி மால் தாண்டினால் சிக்கல். மாரடைப்பு ஏற்பட்ட நேரத்தில் ரத்த மாதிரியைச் சோதித்ததில், பொட்டாஷியம் அளவு கூடியிருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்து, அளவைக் குறைப்பதற்கான முயற்சியிலும் ஈடுபட்டனர்.