கன்ட்ரோல் ரூம் | Police Atrocities News - Junior Vikatan | ஜூனியர் விகடன்

கன்ட்ரோல் ரூம்

- காக்கிசான், ஓவியம்: ரமணன்

கடையில்லா ஊரில் தடையில்லா போதை!

பு
யல் பாதித்த நாகை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தபோதிலும் ஆங்காங்கே சாலை மறியல், நிவாரணப் பொருள்கள் வழிப்பறி எனக்  குடிமகன்களின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. வேட்டைக்காரனிருப்பு, கீழையூர் காவல் நிலையங்கள் எல்லைக்கு உட்பட்ட பல கிராமங்களில் கள்ளச்சாராய விற்பனை கொடிகட்டிப் பறக்கிறது. பூவத்தடியைச் சேர்ந்த கள்ளச் சாராய வியாபாரி ஒருவர், காரைக்காலில் இருந்து சாராயத்தைக் கடத்திவந்து விற்பனை செய்கிறார்; காவல் நிலையங்களுக்கு ‘கரெக்ட்’ ஆக மாமூல் போவதால், கிராமங்களில் தாராளமாக கள்ளச்சாராயம் புழங்குகிறது. உயிரிழப்பு பெரிதாக நடந்தால்தான், கவனிக்குமா காவல்துறையின் மேலிடம்?

காக்கியின் ஒருங்கிணைப்பில் சேவல் சண்டை போட்டிகள்!

தி
ருப்பூர் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் சேவல் சண்டை, சூதாட்டம் போன்ற சட்டவிரோதச் செயல்கள் பல தோட்டங்களில் அமோகமாக நடக்கின்றன. சேவல்களைப் போட்டிகளில் இறக்குவதற்கு ஒரு தொகையும், பார்வையாளர்களாக நின்று வேடிக்கைப் பார்க்க ஒரு தொகையும் நிர்ணயித்து, பணத்தை அள்ளுகிறார்கள் சேவல் சண்டை ஏற்பாட்டாளர்கள்.  வசூலில் சரி பாதி பங்கு எஸ்.பி ஆபீஸில் பணியாற்றும் சில முக்கிய அதிகாரிகளுக்குப் போகிறதாம். லோக்கல் டி.எஸ்.பி-க்கள் இதுதொடர்பாக வரும் புகார்களையும் கண்டுகொள்வதில்லை. யாராவது எஸ்.பி ஆபீஸுக்கே சென்று புகார் அளித்தாலும்கூட, அடுத்த நொடியே புகார் கொடுத்தவரின் விவரங்கள் சேவல் சண்டை ஏற்பாட்டாளர்களின் கைகளுக்குப் போய்விடுகின்றன. இதனால், பொதுமக்கள் புகார் தரவே பயப்படுகின்றனர். சிட்டி லிமிட்டில் டாஸ்மாக்கில் இருந்து வரும் மாமூலே, காக்கிகளுக்குப் போதும்; புறநகரில் அந்தளவு வசூல் இல்லை; அதனால்தான், பல இடங்களில் சேவல் சண்டை நடத்தும் முக்கியப் புள்ளிகளை அதிகாரிகளே ஒருங்கிணைத்து, போட்டிகளை நடத்த ஊக்குவிக்கிறார்களாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick