‘சர்ச்’சை மட்டும் மீட்கிறாரா? - சர்ச்சையில் பினராயி!

பரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்துப் பெண்களையும் அனுமதிக்கும் விவகாரத்தைத் தொடர்ந்து, பிறவம் தேவாலயப் பிரச்னை, கேரள அரசுக்குப் பெரும் தலைவலியாக மாறியுள்ளது.

கேரளம் எர்ணாகுளம் மாவட்டத்தில் மூவாற்றுப்புழா ஆற்றின் கரையில் அமைந்துள்ளது பழைமையான செயின்ட் மேரீஸ் சர்ச். ‘பெத்லஹேமில் மாட்டுத் தொழுவம் ஒன்றில் இயேசு கிறிஸ்து பிறந்தபோது, அவரை வணங்கிய மூன்று ஞானிகளில் ஒருவரான காஸ்பர், இந்தத் தேவாலயத்தைக் கட்டினார்; இயேசுவின் பிறப்பைக் கண்டுவந்தவர் கட்டியதால் பிறவம் என்று பெயர் வந்தது; உலகின் முதல் தேவாலயம் இதுதான்’. இவை எல்லாம் மக்களின் நம்பிக்கை. இவ்வளவு பாரம்பர்யம் வாய்ந்த இந்த சர்ச்சில்தான், நிர்வாகத்தைக் கைப்பற்றுவதற்கு இரு பிரிவினர் இடையே பிரச்னை. ‘யாக்கோபு சபையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் தேவாலய நிர்வாகத்தை, ஆர்த்தடோக்ஸ் சபையிடம் வழங்க வேண்டும்’ என்று கடந்த மே மாதம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வழங்கியது. எனவே, இந்தத் தேவாலயத்தை மீட்டு, ஆர்த்தடோக்ஸ் சபையினரிடம் ஒப்படைப்பதற்காக, கேரள போலீஸார் சென்றனர். அப்போது, சர்ச்சுக்குள் இருந்த நூற்றுக்கணக்கானோர் உயர்ந்த கட்டடங்களின் மீது நின்றுகொண்டு, தற்கொலை மிரட்டல் விடுத்தனர். அதனால், போலீஸார் பின்வாங்கினர். சபரிமலையைத் தொடர்ந்து, இந்த விவகாரம் கேரள அரசுக்குத் தலைவலியாக மாறியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick