‘கிங் மேக்கர்’ ஸ்டாலின்? - ராகுல் விசிட் ரகசியம்...

அது, 2004-ம் ஆண்டு. நாடாளுமன்றத் தேர்தலுக்காகத் தேசமே தயாராகிக்கொண்டிருந்தது. 1980-ல் இந்திராவை வரவேற்று ‘நேருவின் மகளே வருக... நிலையான ஆட்சியைத் தருக’ என்று வரவேற்ற அதே கருணாநிதி,அப்போது ‘இந்திராவின் மருமகளே வருக.. இந்தியாவின் திருமகளே வெல்க’ என்று சோனியாவை வரவேற்றார். அந்தத் தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க தலைமையிலான கூட்டணி, நாற்பதுக்கு நாற்பது தொகுதிகளையும் அள்ளியது. கருணாநிதி ‘கிங் மேக்கர்’ ஆன தருணங்கள் அவை!

அதை மனதில் கொண்டுதான், ராகுல் காந்தியைப் ‘பிரதமர் வேட்பாளர்’ என்று கை காட்டி, ‘கிங் மேக்கர்’ ஆகும் முயற்சியில் இறங்கியுள்ளார் ஸ்டாலின் என்கிறார்கள் அறிவாலயம் வட்டாரத்தில்.

இதுகுறித்து தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் சிலர் உற்சாகமாகவே தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்கள். “டெல்லியில், மதச்சார்பற்ற கட்சிகள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், மற்ற எந்தக் கட்சியைவிடவும் தி.மு.க-வுக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது. மோடியை வீழ்த்துவதில் முழுமூச்சாகக் களமிறங்கியுள்ள சந்திரபாபு நாயுடுகூட, ஸ்டாலினுக்கு காங்கிரஸ் தரும் முக்கியத்துவத்தை ரசிக்கவே செய்தார். முதலில் கருணாநிதி சிலைத் திறப்புவிழாவுக்கு சோனியாவை மட்டுமே அழைப்பதென்று தி.மு.க தரப்பில் முடிவு செய்யப்பட்டது. ஆனால், அழைப்பிதழை சோனியாவிடம் அளித்த ஸ்டாலின், திடீரென ராகுல் காந்தியையும் விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். திடீர் அழைப்பு என்பதால் அப்போது ராகுல் தரப்பிலிருந்தும் பதில் எதுவும் சொல்லப்படவில்லை.

Editor’s Pick