ரஃபேல் விவகாரம்... அடுத்த தேர்தலுக்கும் ஆயுதம் இதுதான்! | Rafale deal controversy - Junior Vikatan | ஜூனியர் விகடன்

ரஃபேல் விவகாரம்... அடுத்த தேர்தலுக்கும் ஆயுதம் இதுதான்!

‘‘இந்திய ராணுவத்தைப் பலவீனப்படுத்தும் விதமாக எதிரிகளுடன் இணைந்து காங்கிரஸ் வேலை செய்கிறது. இங்கு காங்கிரஸ் தலைவர்கள் சொல்லும் கருத்துகளுக்கு, பாகிஸ்தானிலிருந்து பாராட்டுகள் குவிகின்றன’’ என்று சோனியா காந்தியின் ரேபரேலி தொகுதியில் தேசபக்தி முழக்கமிட்டிருக்கிறார் பிரதமர் மோடி.

ரஃபேல் ஒப்பந்த விவகாரத்தில் டிசம்பர் 14-ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வைத்துக்கொண்டு நாடு முழுக்க 90-க்கும் மேற்பட்ட இடங் களில் பிரஸ் மீட் நடத்திய பி.ஜே.பி., ‘இந்த விஷயத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அரசுமீது தேவையற்ற அவதூறுகளைப் பரப்புகிறார்கள்’ எனக் குற்றம் சாட்டியது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பும், இதேபோல ‘தேசபக்தி தீர்ப்பாக’ இருக்க, பி.ஜே.பி மீண்டும் இறங்கிவந்து அடிக்கிறது. சமீப காலங்களில் பல தீர்ப்புகள் சர்ச்சைக்குள்ளானது போலவே, ரஃபேல் தீர்ப்பும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ஏன் இந்தச் சர்ச்சை? இதன்மூலம் காங்கிரஸும் பி.ஜே.பி-யும் என்ன பலன்களை அடைய நினைக் கின்றன?

ரஃபேல் பேரம் தொடர்பாகப் போடப் பட்ட நான்கு வழக்குகளை மொத்தமாக இணைத்து உச்ச நீதிமன்றம் விசாரித்தது. முதல் வழக்கைப் போட்டவர், மனோகர் லால் சர்மா. ‘ரஃபேல் விமானங்களை வாங்குவதில் நடந்த ஊழல் அம்பலப்படுத்தப்பட வேண்டும்’ என்று அவர் கோரிக்கை வைத்தார். இந்த வழக்கு கடந்த அக்டோபர் மாதம் விசாரணைக்கு வந்தபோது, வினீத் தண்டா என்பவர் இன்னொரு வழக்கு போட்டார். ‘ரஃபேல் விவகாரத்தில் தேவையில் லாமல் பிரதமர்மீது களங்கம் சுமத்தப்படுகிறது. அவர் மீதான பழி துடைக்கப்பட வேண்டும்’ என்பது அவரது கோரிக்கை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick