என்ன செய்தார் எம்.பி? - கு.பரசுராமன் (தஞ்சாவூர்)

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
ஒரு வாக்குறுதியும் இன்னும் நிறைவேறலைங்கிறது உண்மைதான்ஓவியம்: கார்த்திகேயன் மேடி

#EnnaSeitharMP
#MyMPsScore

ரத்தநாடு அருகில் உள்ள புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரசுராமன். உள்ளூர் பிரச்னை காரணமாக ஊரைவிட்டு வெளியேறி, தஞ்சாவூர் மெடிக்கல் காலேஜ் பகுதிக்குக் குடிவந்தார். ஃபைனான்ஸ், ரியல் எஸ்டேட் உட்பட பல தொழில்களில் கொடிகட்டிப் பறந்தார். முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கமும் இவரும் தொழில் பார்ட்னர்கள். ஒரு கட்டத்தில் வைத்திலிங்கத்தின் உதவியால், அ.தி.மு.க-வில் சேர்ந்து நீலகிரி ஊராட்சியில் பஞ்சாயத்துத் தலைவரானார். அதே வைத்திலிங்கம் உதவியுடன் எம்.பி சீட் வாங்கி, வெற்றியும் பெற்றுவிட்டார். தொகுதி மக்களிடம் தொழில் அதிபராக அறிமுகமாகி, அரசியலில் உயர்ந்த பரசுராமன், தன்னைத் தேர்ந்தெடுத்த தஞ்சாவூர் மக்களுக்கு என்ன செய்திருக்கிறார்?
 
தொகுதியின் எந்தப் பக்கம் சென்றாலும் கொதித்துக்கிடக்கிறார்கள், மக்கள். “கஜா புயலால் இவ்வளவு கஷ்டப்படுறோம். ஆறுதல் சொல்லக்கூட யாரும் வரல. விவசாயம் அழிஞ்சுபோஞ்சு. குடிதண்ணீருக்குக்கூட சிரமப்படுறோம். எங்களுக்கு என்னாச்சுன்னு பார்க்கக்கூட எம்.பி வரல. எங்க நிலைமை நாளுக்கு நாள் மோசமாகிட்டு இருக்கு. ஆனா, எம்.பி-யோட லெவல் மட்டும் எங்கேயோ போயிடுச்சு” என்று கொந்தளிக்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick