“நிவாரணப் பொருள்களை அபகரிக்க எப்படிதான் மனசு வந்துச்சோ!”

கஜா நிவாரண பேக்கிங் முறைகேடு

பொதுமக்களின் வேதனையையும், கண்ணீரையும் துடைக்க வேண்டிய அரசு, அவர்களின் துயரத்தைப் பயன்படுத்திக்கொள்ளையடித்திருப்பது அம்பலத்துக்கு வந்திருக்கிறது. டெல்டா மாவட்டங்களைப் புரட்டிப்போட்ட கஜா புயலுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கும் திட்டத்தில் பேக்கிங் பணியில் பெரும் ஊழல் நடந்திருப்பது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட மக்களுக்கு தமிழக அரசின் சார்பில் 27 வகையான நிவாரணப் பொருள்கள் வழங்கப்படுகின்றன. இவற்றை பேக்கிங் செய்யும் பணிகளில் தஞ்சாவூர், திருச்சி, விழுப்புரம் உட்பட சில மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகங்களுக்குச் சொந்தமான கிடங்குகளில் உள்ள கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஈடுபட்டனர்.

பேக்கிங் செய்த ஊழியர்களுக்கு, தனியாகச் சம்பளம் எதுவும் தரப்படவில்லை. அரசுக்குக் கூடுதல் செலவுமில்லை. என்ன நடந்ததோ தெரியவில்லை, பேக்கிங் செய்யும் பணி திடீரெனத் தனியாருக்குச் சொந்தமான ‘பேக்கிங் அண்டு மூவர்ஸ்’ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. சத்துணவு முட்டை ஊழலில் சிக்கிய கிறிஸ்டி குழுமத்திற்குச் சொந்தமான நிறுவனம் இது என்று சொல்லப்படுகிறது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick