ஆஹான்

 Kanagaraj Karuppaiah
2 + 8 = 10
ஒரு சிறு தவறு நேர்ந்துவிட்டது.
என்ன?
அது ப்ளஸ் இல்லை, மைனஸ். அதைச் சரி செய்ங்க.
அப்படின்னா 2 - 8 = -6
இல்லை... ப்ளஸுக்கு பதிலா மைனஸ் மட்டும் போட்டா போதும். ரொம்பச் சிரமப்பட வேண்டாம்.
இது, குமாரசாமி கணக்கை மிஞ்சின #ரஃபேல் டீல் கணக்கால்ல இருக்கு!

 கரிகாலன்
சோனியா, ராகுல் எல்லாம் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். கலைஞருக்குக் கிடைத்த தேசிய முக்கியத்துவத்தை அந்தக் காலத்தில் அண்ணா பெறவில்லை. இருப்பினும், தமிழகத்தில் காங்கிரஸுக்கு சவக்குழித் தோண்டி அடக்கம் செய்தவர் அண்ணா. காங்கிரஸை புதைத்த இடத்தில் இதுவரை ஒரு புல் பூண்டும் முளைக்கவில்லை. அத்தகைய அண்ணாவின் நினைவிடத்துக்கு, தேசிய அளவில் பெரிய தலைவர்கள் யாரும் வந்ததாக நினைவில் இல்லை. நேற்று சோனியா, ராகுலை வரவழைத்தது வணங்க வைத்தது தி.மு.க-வின் வெற்றி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick