சாதி கொன்ற நீதி! - சாட்சிகள் இதோ...

மீபகாலமாக, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தமிழகத்தில் அதிகரித்து வருகின்றன. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைத்ததா, வழக்குகள் முறையாக நடத்தப்படுகின்றனவா, குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்களா என்று பல கேள்விகள் எழுகின்றன. பாதிக்கப்பட்ட பெண்கள், நடைப்பிணம்போல வாழ்கிறார்கள் என்பதே உண்மை. இதை, ‘தமிழகமும்... பெண்கள் மீதான பாலியல் கொடுமைகளும்’ என்ற தலைப்பில் ‘எவிடன்ஸ்’ அமைப்பு மதுரையில் நடத்திய பொது விசாரணையில் கண்கூடாகவே காண முடிந்தது.

அனைத்து சாதிகளையும் சேர்ந்த பெண்கள், குழந்தைகள்மீது பாலியல் கொடுமைகள் தொடர்கின்றன. அதே நேரம், கிராமங்களில் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு முக்கியக் காரணமாக சாதிய ஆதிக்கம் உள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு நடந்ததை வெளியே சொன்னாலும், நியாயம் கிடைப் பதில்லை. காவல் நிலையங்களுக்கு வரும் பெரும்பாலான புகார்கள், கட்டப்பஞ்சாயத்தில் கரைந்துபோகின்றன. தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்கள் அச்சத்தில் வாழ்கிறார்கள் என்பது அப்பட்டமான, நாம் ஒவ்வொருவரும் அவமானப்பட வேண்டிய உண்மை. இதற்கு, இந்த நிகழ்வில் பங்கேற்ற ஒவ்வொரு பெண்ணின் கண்ணீரும் கதறலுமே சாட்சி!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick