கண்டுகொள்ளப்படாத தியாகம்! - தியாகத்துக்கு மரியாதை செய்ய நாம் தவறக்கூடாது

படங்கள்: பா.பிரசன்னா

நாகை மாவட்டத்தில், 2009-ம் ஆண்டு குளத்தில் மூழ்கிய பள்ளிக் குழந்தைகள் 12 பேரின் உயிரைக் காப்பாற்றிவிட்டு, தன் உயிரைத் தியாகம் செய்த ஆசிரியர் சுகந்தியை நினைவு இருக்கிறதா? எப்படி அவரை மறக்க முடியும் என்கிறீர்களா? ஆனால், தமிழக அரசு அவரது குடும்பத்தை ஒட்டுமொத்தமாக மறந்துவிட்டது. அரசு உறுதியளித்த உதவிகள்கூட கிடைக்காமல் நிர்கதியாய் தவிக்கிறது சுகந்தியின் குடும்பம். இதுதான் அவரது தியாகத்துக்குக் காட்டும் நன்றியா?

வேதாரண்யம் அருகே நாகக்குடையான் தெற்கில் வசித்தவர் சுகந்தி.  கரியாப்பட்டணத்திலுள்ள தேவி மழலையர் பள்ளியில் மாதம் ரூ.6,000 சம்பளத்தில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். 2009-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி காலை வேனில் பள்ளிக் குழந்தைகளுடன் சுகந்தி சென்றபோது, கத்தரிப்புலம் அருகே காமாட்சியம்மன் குளத்தில் வேன் கவிழ்ந்தது. குழந்தைகளைக்கூடக் காப்பாற்றாமல் ஓட்டுநர் தப்பிவிட்டார். வேனில் சிக்கிக் கதறிய குழந்தைகளை, ஒவ்வொருவராகக் கரையில் கொண்டுவந்து சேர்த்தார் சுகந்தி. 12 குழந்தைகளைத் தூக்கிவந்த சுகந்தி, மேலும் ஒரு குழந்தையைத் தூக்கிக்கொண்டு நீந்திவந்தபோது, அந்தக் குழந்தையுடன் நீரில் மூழ்கி இறந்துபோனார். அவருடன் ஒன்பது குழந்தைகளும் இறந்துவிட்டனர். சுகந்தி தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல், 12 குழந்தைகளைக் காப்பாற்றிய தியாகம், தமிழகம் மட்டுமல்லாமல், நாடு முழுவதும் கண்ணீருடன் பேசப்பட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick