“ஏமாற்றும் என்.எல்.சி!” - முடிவுக்கு வராத மூன்றாம் சுரங்கப் பிரச்னை...

ன்.எல்.சி நிறுவனம் தனது மூன்றாவது திறந்தவெளிச் சுரங்கத்துக்காக நெய்வேலி அருகே 40 கிராமங்களில் 4,842 ஹெக்டேர் நிலத்தைக் கையகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது. ஏற்கெனவே சுரங்கங்கள் அமைக்கப்பட்டபோது, ஏராளமானோர் நிலம் வழங்கினர். அவர்களுக்கு என்.எல்.சி அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வில்லை. எனவே தற்போதைய திட்டத்தை, கிராம மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

என்.எல்.சி நிறுவனம், இரண்டு திறந்தவெளி சுரங்கங்களில் நிலக்கரியை வெட்டியெடுத்துவருகிறது. இப்போது மூன்றாவது சுரங்கம் தோண்டி, அதிலிருந்து 11.50 மில்லியன் டன் பழுப்பு நிலக்கரி வெட்டியெடுக்க என்.எல்.சி முடிவு செய்துள்ளது. இதற்காக நெய்வேலி அருகே எரும்பூர், அகரஆலம்பாடி, வீரமுடையாநத்தம், கொளப்பாக்கம், விளக்கப்பாடி, கம்மாபுரம் உட்பட 40 கிராமங்களில் 4,842 ஹெக்டேர் நிலத்தை 2,130 கோடி ரூபாய் மதிப்பில் கையகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.  இதற்கு முன்பு, என்.எல்.சி நிறுவனம் விவசாயிகளிடம் நிலம் கையகப்படுத்தியபோது வீட்டுக்கு ஒருவருக்கு வேலை, மாற்று இடம், மாற்று மனை, மறுவாழ்வுக்குத் தேவையான உதவிகள் செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அவற்றை முறையாகச் செய்யவில்லை என்று நிலம் கொடுத்தவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். குறிப்பாக நிலம், வீடு கொடுத்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்காமல், அவுட் சோர்சிங் முறையில் வெளிமாநிலத் தொழிலாளர்களை என்.எல்.சி நிர்வாகம் பணிக்கு அமர்த்தியுள்ளது என்பது மக்களின் முக்கியக் குற்றச்சாட்டு. இப்போது, மூன்றாவது சுரங்கப் பிரச்னை கிளம்பியுள்ளது

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick