2,000 கோடி ரூபாய் ஊழல்? - மத்திய அமைச்சருக்கு எதிராக திரளும் இயக்கங்கள்!

நான்குவழிச்சாலை உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களில் 2,000 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்துள்ளது என்று கிளம்பியுள்ள குற்றச்சாட்டால் கன்னியாகுமரி மாவட்டம் பரபரக்கிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் நான்கு வழிச்சாலை அமைப்பது உள்ளிட்ட வளர்ச்சித் திட்டங்களில் மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பதாக ‘மீண்டெழும் குமரி’ இயக்கம் குற்றம்சாட்டியுள்ளது. இந்த ஊழல் குற்றச்சாட்டுடன், மீண்டெழும் குமரி இயக்கத்தைச் சேர்ந்த தாமஸ் பிராங்கோ, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.ஜி.தேவசகாயம் உள்ளிட்டோர் களமிறங்கியுள்ளனர். இதையடுத்து, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பி.ஜே.பி-யினருக்கும் மீண்டெழும் குமரி இயக்கத்தினருக்கும் இடையிலான மோதலாக இந்த விவகாரம் மாறியிருக்கிறது.

இந்தக் குற்றச்சாட்டு குமரி மாவட்டத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இந்த விவகாரம், மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனுடன் இணைத்துப் பேசப்பட்டது. அதைத் தொடர்ந்து, தேவசகாயத்திற்கு  வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் பொன்.ராதாகிருஷ்ணன். தேவசகாயத்தின் உருவபொம்மையை பி.ஜே.பி-யினர் கொளுத்தினர். அதையடுத்து, பொன்.ராதாகிருஷ்ணன் உட்பட பி.ஜே.பி  நிர்வாகிகள் 10 பேர் மீது மீண்டெழும் குமரி இயக்கத்தினர் போலீஸில் புகார் அளித்தனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick