“மேகமலையில் யானைகள் வேட்டை?” - வேடிக்கை பார்க்கும் வனத்துறை! | Elephants hunting in Megamalai - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (22/12/2018)

“மேகமலையில் யானைகள் வேட்டை?” - வேடிக்கை பார்க்கும் வனத்துறை!

தேனி மாவட்டத்தில் உள்ள மேகமலை வன உயிரினக் காப்பகத்தின் கிழக்கு சரகத்தில் சமீபத்தில் ஏழு யானைகள் அடுத்தடுத்து மரணமடைந்தன. தாழ்வாகச் செல்லும் உயர் மின் அழுத்தக் கம்பியில் சிக்கி அந்த யானைகள் பலியாகியிருப்பதாகச் சொல்லப்படுகிறது என்றாலும், அந்தப் பகுதியில் யானை வேட்டை நடப்பதாகச் சந்தேகம் கிளப்புகிறார்கள் வன விலங்கு ஆர்வலர்கள்.

மேகமலை வன உயிரினக் காப்பகத்தின் கிழக்கு சரகத்தில் குறிப்பாக, வெண்ணியாறு பீட் என்ற பகுதியில் யானைகள் மரணமடைகின்றன. இந்த விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வந்தபோது, வனத்துறையை நீதிபதிகள் கடுமையாகச் சாடினர். ‘யானைகள் உயிரிழப்பைத் தடுக்கத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்தச் சூழலில், அதே இடத்தில் மின்சாரம் தாக்கி மேலும் இரு பெண் யானைகள் உயிரிழந்தன. அதையடுத்து, உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து பொதுநல வழக்காக இதைப் பதிவு செய்து விசாரணை நடத்தியது.