பொறுப்பைத் தட்டிக்கழிக்கிறதா சி.பி.ஐ? - மீண்டும் சூடுபிடிக்கும் விஷ்ணுப்ரியா தற்கொலை வழக்கு...

மிழகக் காவல்துறை வரலாற்றில் துடைக்க முடியாத களங்கங்களில் ஒன்று, டி.எஸ்.பி விஷ்ணுப்ரியாவின் தற்கொலை. கோகுல்ராஜ் கொலைவழக்கை  விசாரித்து வந்த நிலையில், உயர் அதிகாரியால் மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டு அவர் தற்கொலை செய்துகொண்டார்’ என்பது இதில் வைக்கப்படும் குற்றச்சாட்டு. உலகளவில் முன்னணி விசாரணை அமைப்பு என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் சி.பி.ஐ., இந்தச் சாதாரண வழக்கையே முடிக்க முடியாமல் கடந்த மே மாதம் இந்த வழக்கைக் கைவிடுவதாக அறிவித்தது. ஆனால், ‘சம்பந்தப்பட்ட சாட்சிகளிடம் முறையாக விசாரணை நடத்தாமலேயே வழக்கை முடிக்கப் பார்க்கிறார்கள்’ என்று விஷ்ணுப்ரியாவின் தந்தை ரவி தரப்பு வாதிடவே, கோவை தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி, சி.பி.ஐ விசாரணையைத் தொடர வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார். இம்முறையாவது சி.பி.ஐ முறையாக விசாரித்து நியாயம் தேடித் தருமா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick