மிஸ்டர் கழுகு: பத்து எம்.எல்.ஏ-க்களுக்கு குறி... தி.மு.க வேட்டை ஆரம்பம்

“அண்ணன் என்னடா... தம்பி என்னடா... அவசரமான உலகத்திலே...” என்று பாடியபடியே வந்தார் கழுகார்.

“புரிகிறது... புரிகிறது. ஓ.பி.எஸ்-ஸின் தம்பி நீக்கம் பற்றித்தானே சொல்லவருகிறீர்...” என்றோம்.

“அடடே, உமக்குக் கற்பூரப்புத்தி... என்ற கழுகார், “ஓ.பி.எஸ்-ன் தம்பி ஓ.ராஜா அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் அதிரடியாக நீக்கப் பட்டிருக்கிறார். ‘கழக உடன்பிறப்புகள் அவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது’ என்று தலைமைக் கழகம் 19-ம் தேதி மாலை அறிவித்தது. ஆனால், அன்று காலைதான் அவர் கோலாகலமாக மதுரை ஆவின் தலைவராக  பதவியேற்றுக்கொண்டார். ஆவினில் பலரது அதிருப்திகளுடன் அவர் தலைவர் பதவியைப் பிடித்ததாகக் கிளம்பிய புகாரில்தான், ராஜா கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்பட்டாலும், ‘தன் தம்பியை நீக்க ஓ.பி.எஸ் எப்படி கையெழுத்திட்டார்?’ என்று ஆச்சரியப் படுகிறார்கள்.”

“சரி, என்னதான் நடந்தது?”

“கைவசம் எந்தப் பதவியும் இல்லாத நிலையில், ஆவின் சேர்மன் பதவியைப் பிடிக்கலாம் என்று ராஜா திட்டமிட்டிருந்தார். இவருக்கு எதிராக தேனி பி.சி.பட்டியைச் சேர்ந்த அம்மாவாசி, ‘கூட்டுறவுத் தேர்தலில் ஓ.ராஜா முறைகேடு செய்து, அதிகாரிகளைத் தன் வசப்படுத்தித் தலைவர் பதவியை அடைய முயற்சி செய்கிறார்’ என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிமன்றம், ‘வீடியோ பதிவுடன் நேர்மையாகத் தேர்தல் நடத்த வேண்டும்’ என உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 15-ம் தேதி நடந்த கூட்டுறவு சங்கத் தேர்தலில் வெற்றி பெற்றார். அதைத் தொடந்தே 19-ம் தேதி காலை பதவியேற்பும், மாலை கட்சியிலிருந்து நீக்கமும் நடந்திருக்கிறது.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick