அனுமதியற்ற ஜெ. சிலையை அகற்றுமா அரசு? | Jayalalaitha statue issue in Thanjavur - Junior Vikatan | ஜூனியர் விகடன்

அனுமதியற்ற ஜெ. சிலையை அகற்றுமா அரசு?

ஞ்சாவூர் ரயில் நிலையம் எதிரே உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு அருகில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலை, உரிய அனுமதி பெறாமல் இரவோடு இரவாகத் திறக்கப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் ரயில் நிலையம் எதிரில் 1994-ம் ஆண்டு எம்.ஜி.ஆரின் சிலை திறக்கப்பட்டது. ரயில்வே, நகராட்சி, நெடுஞ்சாலைத் துறை உட்படப் பல்வேறு துறைகளிடம் அனுமதி வாங்கியே அந்தச் சிலையை ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசு திறந்தது. இப்போது, ஜெயலலிதா சிலையை அங்கு வைப்ப தற்கு எந்த அனுமதியும் வாங்கப்படவில்லை. மேலும், ஜெயலலிதாவின் சிலையைத் திறக்கப்போகிறார்கள் என்பது சம்பந்தப்பட்ட துறைகளின் அதிகாரிகளுக்குத் தெரிந்தும், அவர்கள் அதைக் கண்டுகொள்ளவில்லை. முன்பு, நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளது எனச் சொல்லி முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முகப்புப் பகுதியை அ.தி.மு.க அரசு இடித்தது. இப்போது, எந்தத் துறையிடமும் அனுமதி வாங்காமல் இந்தச் சிலையைத் திறந்துள்ளனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick