டெல்லி கட்டளை... கட்டாய இணைப்பு - கண்டிஷன்ஸ் அப்ளை

2017 பிப்ரவரி 7-ம் தேதி இரவு, முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் திடீரென ஜெ. சமாதியில் தியானத்தில் அமர்ந்தார். தியானம் முடிந்து, ‘சசிகலா குடும்பத்தினர் என்னை மிரட்டி முதல்வர் பதவியிலிருந்து விலகச் சொன்னார்கள்’ என்று தழுதழுத்த குரலில் சொன்னார். அதைக் கேட்டு தமிழக மக்கள் அதிர்ந்துபோயினர். அன்று இரவே சசிகலா குடும்பத்துக்கு எதிராக தர்மயுத்தம் ஆரம்பித்தார் பன்னீர்செல்வம். ‘வரும் 2019-ம் ஆண்டு அதே பிப்ரவரி மாதம்... அதே மிரட்டல் பின்னணியில் அதிசயம் ஒன்று அ.தி.மு.க-வில் நிகழப்போகிறது’ என்று சுழன்றடிக்கும் செய்திதான் அ.தி.மு.க வட்டாரத்தில் இப்போது ஹாட் டாபிக்!

அ.தி.மு.க - அ.ம.மு.க இணைப்புத் தகவல்கள் கொஞ்சம் நாள்களாகவே பேசப்படுவதுதான். ஆனால், “இப்போது டெல்லியில் இருந்து வரும் டெரர் உத்தரவுகளால் அந்த இணைப்புப் பணிகள் முழுவீச்சில் நடக்கின்றன. அதையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தினகரன், சசிகலா என எல்லோரும் ஓரணியில் இணையும் காலம் வெகு தூரம் இல்லை” என்றபடியே சில அதிரடி தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் அ.தி.மு.க-வின் மூத்த நிர்வாகி ஒருவர். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick