பாலமும் இல்லை... பஸ்ஸும் இல்லை! - பரிசலில் பரிதவிக்கும் பள்ளிக் குழந்தைகள்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சிறுமுகை அருகே லிங்காபுரம் கரந்தையாற்றில் கட்டப்பட்டிருந்த பாலம் தண்ணீரில் மூழ்கிவிட்டது. புதிய பாலம் கட்டப்படாததால், பள்ளிக் குழந்தைகள் உட்பட ஊர்மக்கள் அனைவரும் தினமும் உயிரைக் கையில் பிடித்துகொண்டு பரிசலில் பயணம் செய்கிறார்கள்.

இப்படி ஒரு பிரச்னை இருப்பதை அறிந்து அந்தக் கிராமத்துக்குச் சென்றோம். நீண்ட மலைத்தொடர்களைக் கொண்டிருக்கும் லிங்காபுரம் கிராமத்தைச் சுற்றி, நான்கு மலைக் கிராமங்கள் உள்ளன.

அதில், லிங்காபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்களிடம் பேசினோம். “மேற்குத் தொடர்ச்சிமலை அடிவாரத்தில் 100 அடி உயரம் கொண்ட  பில்லூர் அணை உள்ளது. நான்கு மாதங்களுக்கு முன்பு பெய்த மழையால் நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் 97 அடியை எட்டியது. மேலும், பவானிசாகர் அணையின் நீர்த்தேக்க அளவும் நான்கு மாதங்களாக 100 அடிக்குமேல் உள்ளது. இதனால், கரந்தையாற்றில் உள்ள பாலம் 20 அடி ஆழத்தில் மூழ்கிவிட்டது. நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால், நகரத்துக்குள் செல்ல பரிசலில் மட்டுமே பயணிக்க வேண்டியுள்ளது. எங்கள் குழந்தைகளும் பரிசலில்தான்  பள்ளிக்குச் சென்றுவருகிறார்கள். பிள்ளைகள் பள்ளிக்குப் போய்விட்டு வீடு திரும்பும்வரை நாங்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டிருக்கிறோம்” என்று கவலையுடன் கூறினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick