மறைந்தார் மக்கள் மருத்துவர்! | Rs 5 doctor Jayachandran passed away - Junior Vikatan | ஜூனியர் விகடன்

மறைந்தார் மக்கள் மருத்துவர்!

31, வெங்கடாசலம் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை, சென்னை-21 என்ற முகவரில் எந்த நேரத்தில் சென்று கதவைத் தட்டினாலும், புன்னகையுடன் வந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பார் டாக்டர் ஜெயச்சந்திரன். டாக்டர் ஜெயச்சந்திரனின் வீடு, மருத்துவமனை இரண்டும் மேற்கண்ட ஒரே முகவரிதான். 

 ‘2 ரூபாய் டாக்டர்’, ‘5 ரூபாய் டாக்டர்’ என்பதெல்லாம் அவருக்கு ஊடகங்கள் வைத்த பெயர். வட சென்னை மக்கள் ஜெயச்சந்திரனை தெய்வமாகத்தான் பார்த்தார்கள். அதனால்தான், ஒட்டுமொத்த வடசென்னையும் அவரது மரணத்துக்கு அஞ்சலி செலுத்தியது.

பெரிய செல்வந்தர்கள் தொடங்கி ஆதரவற்ற முதியோர் வரை யாராக இருந்தாலும் ஒரே உபசரிப்புதான். அருகில் அமரவைத்து கைபிடித்து, நம்பிக்கையாகப் பேசுவார். அந்த நொடியே பாதி நோய் ஓடிப்போய்விடும். அவர் காட்டுகிற அன்பாலும் அக்கறையாலும் நெகிழ்ந்து கரைந்துவிடுவார்கள் மக்கள். யாரிடமும் பணம் கேட்கமாட்டார். இயலாதவர்களைக் கண்டுகொண்டு அவரே மருந்து மாத்திரைகள் கொடுப்பார். வீட்டுக்குப்போக ஆட்டோவுக்கும் பணம் கொடுப்பார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick