கணினி... உளவு... களவு!

ர்வாதிகாரிகளால் ஆளப்படும் தேசங்களில்தான், மக்கள் எந்த நேரமும் அரசின் கண்காணிப்பில் இருப்பார்கள். டிசம்பர் 20-ம் தேதி மத்திய அரசு பிறப்பித்த ஓர் உத்தரவு, அப்படி ஓர் அச்சத்தையே மக்கள் மனதில் விதைத்திருக்கிறது. சந்தேகத்துக்குரிய கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன் மூலம் உருவாக்கும், பரிமாறிக்கொள்ளும் எந்தத் தகவலையும் கண்காணிக்கும் அதிகாரத்தை நாட்டின் பத்து விசாரணை அமைப்புகளுக்கு வழங்கியதன் மூலம் தனிநபர் சுதந்திரம் மற்றும் உரிமைகளையே கேள்விக்குறியாக்கியுள்ளது மத்திய அரசு.

சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவு, வருவாய் புலனாய்வுத் துறை, ஐ.பி உள்ளிட்ட 10 அமைப்புகள் இந்த அதிகாரத்தைப் பெற்றுள்ளன. இதன் மூலம் சந்தேகத்துக்குரிய நபர்களின் வாட்ஸ்அப், ஃபேஸ்புக் தகவல் பரிமாற்றங்கள், இ-மெயில் பரிமாற்றங்கள் என எதையும் அவை படிக்க முடியும்.

‘‘தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு மோடி பாதுகாப்பற்ற சர்வாதிகாரியாகத் தன்னை உணர்ந்திருக்கிறார்’’ என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்ய, ‘‘ஏற்கெனவே காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் போடப்பட்ட சட்டத்தை நாங்கள் முறைப்படுத்தி இருக்கிறோம்’’ என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பதிலளித்து இருக்கிறார். நிஜம் என்ன?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick