ஸ்டெர்லைட் அடுத்து என்ன? - சில சந்தேகங்கள்... சில பதில்கள்... | Sterlite Copper CEO Ramnath interview - Junior Vikatan | ஜூனியர் விகடன்

ஸ்டெர்லைட் அடுத்து என்ன? - சில சந்தேகங்கள்... சில பதில்கள்...

ஸ்டெர்லைட் சர்ச்சை தீரவில்லை. ஆலையைத் திறப்பதற்கு தீர்ப்பளித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ரத்து செய்யக்கோரி தூத்துக்குடியைச் சேர்ந்த பேராசிரியர் பாத்திமாபாபு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தார். தொடர்ந்து, ‘தேசிய பசுமைத் தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மார்ச் 14-ம் தேதி வரை அவகாசம் உள்ளது. ஆகவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உள்ளதா என்று தெரிவிக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கும் விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும்’ என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், மூவர் குழு அறிக்கை தொடர்பாகவும், தேசிய பசுமைத் தீர்ப்பாயத் தீர்ப்பு தொடர்பாகவும் எழும் சந்தேகங்கள் குறித்து ஸ்டெர்லைட் தலைமை செயல் அதிகாரியான ராம்நாத்திடம் நாம் முன்வைத்த சில கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் இதோ...

“தருண் அகர்வால் கமிட்டி நடத்திய மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் 15,000 பேர் ஆலைக்கு எதிராகக் கருத்துகளைப் பதிவு செய்துள்ளனர். ஆனால், ஆலை தரப்புக்கு மக்கள் ஆதரவு இருப்பதாகச் சொல்கிறீர்களே?

வெறும் இரண்டாயிரம் மக்களே கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கலந்துகொண்டனர். எங்கள் தரப்பின் கருத்தை அவர்கள் கேட்கவே இல்லை.

“தீர்ப்பாய அறிக்கையில்கூட, புகைப்போக்கியின் உயரம் குறைவாகத்தான் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்களே?’’

“புகைப்போக்கியின் உயரம் சட்டப்படி தான் உள்ளது. மக்கள் அதைப் பிரச்னையாக நினைத்தால் உயர்த்தலாம் என்றுதான் தீர்ப்பில் உள்ளது. விதிப்படி எங்களுக்கு 55 மீட்டரே போதுமானது. ஒரு டன் காப்பர் உற்பத்திக்கு இரண்டு கிலோ கிராம் வரை சல்பர் டை ஆக்ஸைடு வெளியிடலாம். ஆனால், நாங்கள் ஒரு கிலோ கிராம் மட்டுமே வெளியிடுகிறோம்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick