‘நான் சாகவேண்டும் என நினைக்கிறார்கள்!’ | Woman Maoist Padma issue - Junior Vikatan | ஜூனியர் விகடன்

‘நான் சாகவேண்டும் என நினைக்கிறார்கள்!’

மரணத்தின் விளிம்பில் மாவோயிஸ்ட் பத்மா

‘‘சிறைக்குள் வைத்து மாவோயிஸ்ட் பத்மாவைக் கொல்லப் பார்க்கிறார்கள்... காப்பாற்றுங்கள்!’’ என்று ஜூ.வி அலுவலகத்துக்குத் தொலைபேசி அழைப்பு வர... பத்மாவின் கணவர் விவேக்கைச் சந்தித்துப் பேசினோம். அவர் கூறிய தகவல்கள் நம்மைக் கலங்கச் செய்வதாக இருந்தன.

2002-ம் ஆண்டு தர்மபுரி அருகே ஊத்தங்கரையில் ஆயுதப் பயிற்சி மேற்கொண்டது தொடர்பான வழக்கில், க்யூ பிராஞ்ச் போலீஸாரால் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர் பத்மா. இவரின் கணவரான விவேக்கும் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்தவர். ஏற்கெனவே இதயக் கோளாறு பாதிப்பில் இருந்துவந்த பத்மா, சிறையில் அடைக்கப்பட்ட பிறகு ‘தீவிர இதயத்துடிப்பு’ பிரச்னையால் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்.

‘‘இந்த நோயின் பாதிப்புக்கு உள்ளானவர்களின் இதயத் துடிப்பானது, சீரற்ற வேகத்தில் இருக்கும். அதனால், உடல் முழுக்க ரத்த ஓட்டம் தடைபடுவதுடன், மூச்சு விடுவதிலும் சிரமம் இருக்கும். இவர்களுக்கு எந்த நேரத்திலும் மாரடைப்பு ஏற்படுகிற ஆபத்து உள்ளது. எனவே அவர்கள், தொடர்ந்து மருத்துவரின் கண்காணிப்பிலேயே இருக்க வேண்டும்’’ என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick