செக்யூரிட்டி வேலையா... பேராசிரியர் வேலையா? | Salem Indian Institute of Handloom Technology - Junior Vikatan | ஜூனியர் விகடன்

செக்யூரிட்டி வேலையா... பேராசிரியர் வேலையா?

கொதிக்கும் கைத்தறிக் கல்லூரி மாணவர்கள்!

சேலம் மத்தியக் கைத்தறித் தொழில்நுட்பக் கல்லூரிக்கு, அவுட்சோர்சிங் முறையில் பேராசிரியர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆட்கள் நியமிக்கப்படுவதற்கு, கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழக முதல்வராக காமராஜர் இருந்தபோது சேலத்தில் 1960-ம் ஆண்டு ‘இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஹேண்ட்லூம் டெக்னாலஜி’ என்ற பெயரில் மத்திய கைத்தறி தொழில்நுட்பக் கல்லூரி தொடங்கப்பட்டது. மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தக் கல்லூரியில், 2014-ம் ஆண்டு முதல் பி.டெக் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.போதிய  எண்ணிக்கையில் பேராசிரியர்கள் இல்லை என்பது உட்பட பல பிரச்னைகளை மாணவர்கள் பட்டியலிடுகிறார்கள்.

அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் மாவட்டச் செயலாளர் ரமேஷ், ‘‘ஆரம்பத்தில் டிப்ளமோ படிப்புகள்      மட்டுமே இங்கு இருந்தன. 2014-ம் ஆண்டிலிருந்து பி.டெக் படிப்பு சேர்க்கப்பட்டு, அண்ணா பல்கலைக்கழகத்துடன் இது இணைக்கப்பட்டது. ஆனால், பி.டெக் படிப்புக்கான  எந்த ஒரு கட்டமைப்பு வசதியும் இங்கு இல்லை. பி.டெக்  படிப்பு தொடங்குவதற்கு 12 உதவிப் பேராசிரியர்கள், இரண்டு இணைப் பேராசிரியர்கள், ஒரு பேராசிரியர் மற்றும் துறை சார்ந்த மூன்று ஆய்வகப் பணியாளர்கள் இருக்க வேண்டும். ஆனால், அரசால் நேரடியாக நியமிக்கப்பட்ட உதவிப் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், பேராசிரியர்கள், முதல்வர் மற்றும் துறை சார்ந்த ஆய்வகப் பணியாளர்கள் என யாருமே கிடையாது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick