‘பெண்’ கிடைக்காத தேசமாகும் சீனா! - மூன்று கோடி இளைஞர்கள் தவிப்பு...

சீனாவை இரும்புத் திரை தேசம் என்பார்கள். அந்த இரும்புத் திரைக்குள் நடக்கும் அடக்குமுறைகளும் சர்வாதிகார நடவடிக்கைகளும் ஏராளம். அதிபராக ஒருவர் இரு முறை மட்டுமே பதவி வகிக்கமுடியும் என்கிற விதிமுறையை ஓர் ஆண்டுக்கு முன்பு மாற்றி, கிட்டத்தட்ட நிரந்தர அதிபராகப் பதவியேற்ற ஷி ஜின்பிங்கின் நடவடிக்கையே இதற்கு சாட்சி. இது மட்டுமல்ல... சீனாவில் நடக்கும் மனித உரிமை மீறல்கள், பெண்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இவையெல்லாம் சேர்ந்து இன்று அங்கு பாலின விகிதாச்சாரத்தில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றன. இதனால், இளம் பெண்கள் பற்றாக்குறையில் தத்தளிக்கிறது சீனா. ஆம், இன்று சீனாவில் திருமணம் செய்துகொள்ள பெண் கிடைக்காமல், சுமார் மூன்று கோடிக்கும் அதிகமான இளைஞர்கள் தவிக்கிறார்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick