மிஸ்டர் கழுகு: எரியும் சாதி அரசியல்! - ஆட்டம் காணும் அ.தி.மு.க | Mr.Kazhugu - Politics & Current affairs - Junior vikatan | ஜூனியர் விகடன்

மிஸ்டர் கழுகு: எரியும் சாதி அரசியல்! - ஆட்டம் காணும் அ.தி.மு.க

“டேக் டைவர்ஷன்...” என்றபடியே கழுகார் நுழைந்தார்.
 
“ ‘அ.ம.மு.க-விலிருந்து வர நினைப்பவர்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோஷ்டியில் இருக்கும் சில வி.ஐ.பி-களே முட்டுக்கட்டைப் போடுகிறார்கள்; கட்சிக்குள் சாதி அரசியல் கொளுந்துவிட்டு எரிகிறது’ என்கிற உளவுத்துறை தகவலைக் கேள்விப்பட்டு அதிர்ந்தாராம் முதல்வர். சுதாரித்துக்கொண்ட அவர்,  மாவட்டவாரியான அறிக்கையைக் கேட்டிருக்கிறார். தொடர்ந்து உளவுத்துறை ஐ.ஜி-யான சத்தியமூர்த்தி, ஒரு பெரிய பட்டியலே போட்டாராம். உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் வரும் சூழலில், எதிர் முகாமிலிருந்து வரும் ஆட்களால் தங்களுக்கான முக்கியத்துவத்தைப் பங்குபோட வேண்டியிருக்கும் என சுயநலமாக யோசிக்கிறார்களாம் பலரும். அந்த வகையில், தினகரன் தரப்பிலிருந்து பத்து பேர்வரை வரத் தயாராக இருந்தும், அவர்களை ‘டேக் டைவர்ஷன்’ என்று சொல்லி, தி.மு.க முகாமுக்கு அனுப்பும் வேலையைச் செய்துவருகிறார்களாம்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick