“பி.ஜே.பி-யுடன் சேருவோர் இனத்துரோகிகள்!”

திருச்சியில் கருஞ்சட்டை கர்ஜனை

“பெரியாருக்கு செருப்பு மாலை போட சிலர் அறைகூவல் விடுக்கிறார்கள். அதனால்தான், இங்கே நாம் ஒருங்கிணைத்துள்ளோம். இது வெறும் கூடிக் கலைகிற கூட்டமல்ல. நமக்கான ஆட்சியாளர்களைக் கோட்டைக்கு அனுப்பவும் தயாரான கூட்டம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-யுடன் யார் யாரெல்லாம் கூட்டணி சேர்கிறார்களோ, அவர்கள் எல்லாம் இனத் துரோகிகள்” என்று திருச்சியில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆவேசமாகக் கூறினார்.

பெரியார் நினைவு நாளான டிசம்பர் 23-ம் தேதியன்று திருச்சியில், ‘தமிழின உரிமை மீட்புப் பேரணி மற்றும் மாநாடு’ நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு காவல்துறை அனுமதி மறுத்ததால், உயர் நீதிமன்றத்தில் அனுமதி பெற்று நிகழ்ச்சியை நடத்தினர். பல்லாயிரக்கணக்கில் தொண்டர்கள் குவிந்ததால், போலீஸார் பதற்றத்துடன் காணப்பட்டனர். திருமுருகன்காந்தி, குடந்தை அரசன், அரங்க.குணசேகரன் ஆகியோரின் ஒருங்கிணைப்பில், ஆணைமுத்து, கொளத்தூர் மணி, கோவை ராமகிருட்டிணன், அதியமான் ஆகியோர் சகிதமாக, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேரணியைத் தொடங்கிவைத்தார். சிலம்பம், பறையாட்டம், மேளதாளம் எனக் களைக்கட்டியது பேரணி.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick