பி.ஜே.பி-க்கு ஆதரவாக செயல்படுகிறாரா அமைச்சர் மாஃபா?

அ.தி.மு.க-வில் கிளம்பும் புது புகைச்சல்...

.தி.மு.க அணிகளை இணைக்க டெல்லியிலிருந்து கடும் நெருக்கடி அளிக்கப்பட்டுவருகிறது. இணைப்பு வேலைகளுக்கான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடக்கின்றன. இதற்கிடையே, ‘பி.ஜே.பி-க்கு தொடர்ந்து ஆதரவாகச் செயல்படுகிறார் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்’ என்று அ.தி.மு.க-வுக்குள் புகைச்சல் கிளம்பியுள்ளது.

இதுபற்றி நம்மிடம் பேசிய அ.தி.மு.க முக்கிய நிர்வாகிகள் சிலர், “அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அடிப்படையில் ஓர் இந்துத்வச் சிந்தனையாளர். தொடக்கத்தில் அவர் பி.ஜே.பி ஆதரவாளராக இருந்தார். பின்னர், தே.மு.தி.க-வில் இருந்தபோதும் அப்படித்தான் இருந்தார். அவர் சென்னையில் இருந்தாலும் வெளியூர் சென்றாலும் பி.ஜே.பி நிர்வாகிகள் அவரைச் சந்திக்க வந்துவிடுகிறார்கள். அதேசமயம் அவர் செல்கிற நிகழ்ச்சி, சொல்கிற கருத்து என எதைப் பற்றியும் மற்ற அமைச்சர்களைப்போல முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் பகிர்ந்து கொள்வதில்லை. அ.தி.மு.க-வுக்குள் நடக்கும் ஒவ்வோர் அசைவு பற்றிய தகவலும் இவர் மூலமாகவே பி.ஜே.பி-க்கு செல்கிறதோ என்ற சந்தேகமும் தலைமைக்கு ஏற்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick