உஷ்ஷ்ஷ்... மோடியைப் பற்றி பேசினாலே சிறை! | Manipur Journalist Jailed For Criticising PM Modi - Junior Vikatan | ஜூனியர் விகடன்

உஷ்ஷ்ஷ்... மோடியைப் பற்றி பேசினாலே சிறை!

மணிப்பூர் மனித உரிமை மீறல்

‘பாசிச பி.ஜே.பி ஒழிக’ என்று விமானத்தில் கோஷமிட்ட தூத்துக்குடி மாணவி சோபியா கைது செய்யப் பட்ட விவகாரம், தேசிய அளவில் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. இப்போது, ‘பிரதமர் மோடியின் கைப்பாவை’ என்று மணிப்பூர் முதல்வரை முகநூலில் விமர்சித்ததாகப் பத்திரிகையாளர் ஒருவர், தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது பலத்த கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

பி.ஜே.பி ஆட்சிக்கு வந்த பிறகு, கருத்துச் சுதந்திரம் நசுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. சமூக வலைதளங்களில் பிரதமர் மோடியை விமர்சித்த பலரும் கைதுசெய்யப் பட்டார்கள். உ.பி முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்ற 2017-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மட்டும் இதே காரணத்துக்காக ஏழு பேர் கைதானார்கள். அதன் பிறகும், யோகியை விமர்சித்த ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இன்றும் அந்த நடவடிக்கைகள் தொடர்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick