தைலாபுரத்துத் தைக்கூடல்! | Ramadoss family fuction Thaikoodal - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (31/01/2018)

தைலாபுரத்துத் தைக்கூடல்!

ரு குடும்பம்... ஆண்டுதோறும் அவர்களுக்குள் கலை, விளையாட்டுப் போட்டிகள். இப்படி ஓரிரு ஆண்டுகள் அல்ல... 20 ஆண்டுகளாகக் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து விழா நடத்தி வருகிறார்கள். பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான ராமதாஸின் குடும்பத்தில்தான் இப்படி ஒரு பளபளத் திருவிழா. ஒவ்வோர் ஆண்டும் தைலாபுரம் தோட்டத்தில் தை மாதம் நிகழும் இந்தக் குடும்ப விழாவுக்கு ‘தைக்கூடல்’ என்று பெயர். அந்த விழாவையொட்டி ஒரு சிறப்பு மலர் சென்னையில் வெளியிடப்பட்டது.