ஜூ.வி ஸ்பெஷல் ஸ்டோரி - மோடிகேர் காப்பீடு... மருத்துவத்தைத் தனியார் கையில் தருவதற்கான ஏற்பாடா?

த்திய அரசின் பட்ஜெட்டில் ஒரு மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் ஸ்டார் அந்தஸ்து பெறுவது, இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத புதுமை. மருத்துவச் செலவுகள் பெரும் சுமையாக ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களை அழுத்திவரும் நிலையில், ‘இனி மருத்துவத்தை அரசியல்வாதிகள் புறக்கணிக்க முடியாது’ என்ற உண்மையை மத்திய அரசு உணர்ந்துவிட்டது.

பிரதமர் நரேந்திர மோடியின் ஐந்தாண்டு ஆட்சிக்காலத்தின்  கடைசி பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார் நிதியமைச்சர் அருண் ஜெட்லி. இந்த பட்ஜெட்டின் பிரதான திட்டங்களில் ஒன்று, நாடு முழுக்க 10 கோடி குடும்பங்கள் மருத்துவக் காப்பீடு பெறும் தேசிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டம். ‘‘50 கோடிப் பேர் பயன்பெறப் போகும் உலகின் மிகப் பிரமாண்டமான காப்பீட்டுத் திட்டம் இது’’ என்று பெருமிதமாக நாடாளுமன்றத்தில் அறிவித்தார் அருண் ஜெட்லி.

காந்தி ஜயந்தியான அக்டோபர் 2-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கும் இந்தத் திட்டத்தில் 10 கோடி ஏழைக் குடும்பங்கள் அடையாளம் காணப்பட்டு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 5 லட்சம் ரூபாய்க்குக் காப்பீடு செய்யப்படும். இதற்கான பிரீமியத்தில் 60 சதவிகிதத்தை மத்திய அரசும், 40 சதவிகிதத்தை மாநில அரசும் பகிர்ந்துகொள்ளும்.

ஏற்கெனவே தமிழகத்தில் ஒரு காப்பீட்டுத் திட்டம் உள்ளது. இதை வேறுசில மாநிலங்களும் பின்பற்றுகின்றன. இந்நிலையில், மத்திய அரசு இந்தத் திட்டத்தை அறிவித்துள்ளது. மருத்துவம், கல்வி போன்ற அடிப்படைச் சேவைகளிலிருந்து ஒதுங்கி, அரசுகள் வெறும் கண்காணிப்பாளராக மட்டுமே இருக்க வேண்டும் என்ற உலக வங்கியின் செயல் திட்டம் கடந்த 25 ஆண்டுகளில் படிப்படியாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. `போதிய நிதி ஒதுக்கீடு செய்து, நிர்வாகக் குளறு படிகளை நீக்கி, அரசு மருத்துவமனைகளைச் சிறப் பாக நிர்வகிக்க வேண்டிய மத்திய - மாநில அரசு கள், தனியார் கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கும் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் கொட்டிக் கொடுப் பதற்காகவே இதுபோன்ற பிரமாண்ட காப்பீட்டுத் திட்டங்களைக் கொண்டு வருகிறார்கள்’ என்ற குற்றச்சாட்டு பலமாக எழுந்துள்ளது.

‘‘மத்திய அரசு அறிவித்திருக்கும் இந்தக் காப் பீட்டுத் திட்டமே ஒரு மோசடி. `10 கோடி குடும் பங்களுக்கு 5 லட்ச ரூபாய் காப்பீடு’ என்று அறி வித்துவிட்டு, வெறும் 2,000 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளனர். தமிழகத்தில் தற்போது செயல் படும் தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் ஒரு குடும்பத்துக்கு ஒரு லட்ச ரூபாய் வீதம் காப்பீடு செய்யப்படுகிறது. அதற்காக, மாநில அரசு ஒவ்வொரு குடும்பத்துக்கும் 700 ரூபாய் பிரீமியம் செலுத்துகிறது. இந்தாண்டு முதல் இந்தத் தொகை அதிகரிக்கும் என்கிறார்கள். அந்த அடிப்படையில் பார்த்தால், 5 லட்ச ரூபாய்க்கு ஒரு குடும்பத்துக்கு 2,000 ரூபாயாவது பிரீமியம் செலுத்த வேண்டியிருக்கும். அப்படிப் பார்த்தால், 10 கோடி குடும்பங்களுக்குப் பிரீமியம் கட்ட 20,000 கோடி ரூபாய் தேவைப்படும். இந்த நிதி எங்கிருந்து வரும்? மருத்துவத்துக்கு மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ள தொகை 54,667 கோடி ரூபாய். அதில் 20,000 கோடியைக் காப்பீட்டு நிறுவனங்களுக்கும் கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்கும் வாரிக் கொடுக்கத்தான் இந்தத் திட்டமா? 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்