தா.பாண்டியன் பொன்மொழிகள்

* ‘‘கோவைக்குச் சென்று குப்பை பெருக்கும் கவர்னர், அம்பத்தூரிலும் பெருக்கினால் நன்றாக இருக்கும்.’’

* ‘‘ஏகாதிபத்தியம், கார்ப்பரேட் நிறுவனங்கள், வகுப்புவாதம் இவை அத்தனையும் ஒரே பேயாக உருவெடுத்து வந்திருப்பதுதான் பி.ஜே.பி!’’

* ‘‘தமிழ்நாட்டுக் குளத்தில் தாமரை பூக்கும் என்று கண் இருப்பவன் எவனாவது சொல்வானா?’’

* ‘‘நெற்றிக்கண்ணைத் திறந்தால் பொசுக்கிவிடும் சிவன் சிலையையே கடத்திக்கொண்டுபோய் ஆஸ்திரேலியாவில் விற்றுவிடுகிறான்.’’

* ‘‘மத்திய அரசே! வாகனங்களுக்குப் பதிலாக மந்திரிகளுக்கெல்லாம் மயில் பிடித்துக் கொடு; மற்றவனுக்கெல்லாம் மாடு பிடித்துக் கொடு, எருமை பிடித்துக்கொடு... எங்களைத் தயவுசெய்து விட்டுவிடு!’’

* ‘‘தமிழிசை என்ற நல்ல பெயருக்கும், அவரது பேச்சு மற்றும் நடைமுறைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.’’

* ‘‘இந்திய ராணுவத்துக்கு இனிமேல், அர்ஜுனன் பயன்படுத்திய வில் தரப்படும், பீமன் பயன்படுத்திய கதாயுதம் வழங்கப்படும் என்று பி.ஜே.பி-யினர் சொன்னாலும் சொல்வார்கள்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்