கம்பேரிஸன் கோவாலு!

புதிதாக 2,500 தமிழ் வார்த்தைகளை அரசாணையாக வெளியிட உள்ளதாகத் தெரிவித்திருக்கிறார் தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன். நல்ல விஷயம்தான். அப்படியே, ஏற்கெனவே இருக்கும் சில தமிழ் வார்த்தைகளுக்கு இப்போதுள்ள அர்த்தங்களையும் அப்டேட் செய்துவிட்டால் செம்மொழி செழித்து வளரும். அந்த வார்த்தைகள்...

நிதிநிலை அறிக்கை

முழுக்க முழுக்க ‘ஹம் ஆப் கே கோன் ஐஸ், வாய்ல வச்சா நைஸ்’ என இந்தியிலேயே பாட்டுப் பாடி பட்ஜெட் தாக்கல் செய்திருக்கிறார் அருண் ஜெட்லி. ‘இந்தில பேசுனா மட்டும் எங்களுக்கு உருப்படியா ஏதாவது சொல்லிடுவீங்களாக்கும்’ என நொந்துகொள்கிறார் சாமானியத் தமிழன். எனவே, நிதிநிலை அறிக்கை என்ற வார்த்தைக்கு ‘இந்தியில் ஆத்தப்படும் பேருரை’ என அர்த்தம் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு

ஆயிரம் உயரங்களைத் தொட்டாலும் பழசை மறக்காத புண்ணியாத்மாக்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள் மோடியும் அமித் ஷாவும். ‘பக்கோடா விற்கிறதுகூட வேலைவாய்ப்புதான்’ என செல்லூர் ராஜு ஸ்டைல் ஸ்டேட்மென்ட் விட்டு அசத்துகிறார்கள். எனவே, ‘வேலைவாய்ப்பு’ என்ற வார்த்தைக்கு ‘கடல்லயே இல்லையாம்’ என்ற அர்த்தத்தை அப்டேட் செய்யவும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்