கணபதிக்கு துணிச்சலைத் தந்தது யார்?

ஞ்சப் புகாரில் சிக்கிய பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கணபதியை சஸ்பெண்டு செய்துள்ளார் கவர்னர் பன்வாரிலால் புரோஹித். இதற்கிடையில், 2016-ம் ஆண்டு முதல் பேராசிரியர் பணி நியமனம் உள்பட பல விவகாரங்களில் நடந்த மோசடிகள் குறித்தும், லஞ்ச ஒழிப்புப் போலீஸார் தூசிதட்டி விசாரித்து வருகின்றனர்.

‘பேராசிரியர் பணி நியமனத்தில் மோசடி நடக்க வாய்ப்புள்ளது’ என்று தகவல்கள் வந்ததால், ‘2016-ம் ஆண்டு நவம்பர் 19-ம் தேதி சிண்டிகேட் கூட்டம் நடத்தக்கூடாது. மறு உத்தரவு வரும் வரை கூட்டம் நடத்தக் கூடாது’ என்று உயர்கல்வித் துறை உத்தரவு போட்டது. இதனால், 19-ம் தேதி நடக்க இருந்த சிண்டிகேட் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. எனினும், உயர்கல்வித் துறையின் உத்தரவை மீறி, 22-ம் தேதி சிண்டிகேட் கூட்டத்தை கணபதி நடத்தியுள்ளார். முன்கூட்டியே லஞ்சம் கொடுத்தவர்களை மட்டும் நியமனம் செய்வதற்காகப் பணியிடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அடுத்த சில நாள்களிலேயே அவசர, அவசரமாக பணியிடங்கள் நிரப்பப்பட்டன. “உயர்கல்வித் துறையின் உத்தரவு குறித்த தகவல் எனக்குத் தாமதமாகத்தான் வந்தது” என்று கணபதி சமாளிக்கிறார். ஆனால், உத்தரவை மீறி சிண்டிகேட் கூட்டம் நடத்தியதற்கான ஆதாரங்கள் போலீஸாரிடம் உள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்