பிறந்த வீட்டுச் சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை! - உறுதி செய்த உச்ச நீதிமன்றம்

பிறந்த வீட்டுச் சொத்து மறுக்கப்படும் பெண்கள், இனி தயக்கமின்றி நீதிமன்றத்தை நாடலாம். தற்போது உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கும் சிறப்புமிக்க தீர்ப்பு, அந்தப் பெண்களுக்குச் சொத்துரிமையை உறுதி செய்யும்.

‘குடும்பச் சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு’ என்கிற 2005-ம் ஆண்டு சட்டத்தின் முக்கிய நோக்கத்தை மேற்கோள்காட்டி, இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது உச்ச நீதிமன்றம். கர்நாடகாவைச் சேர்ந்த இரண்டு பெண்கள், தங்களின் தந்தைவழிக் குடும்பச் சொத்தில் தங்களுக்கும் பங்கு வேண்டும் என்று நீதிமன்றம் செல்ல, கீழமை நீதிமன்றங்களில் அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அவர்கள் உச்ச நீதிமன்றத்துக்குச் செல்ல, வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அஷோக் பூஷண் அமர்வு வழங்கியிருக்கும் தீர்ப்புதான் அது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்