சரக்குப் போக்குவரத்து... எளிமையாக்கியுள்ள இ-வே பில்!

ந்தியா முழுவதும் ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறை 2017-ம் ஆண்டு ஜூலை ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. அதன் தொடர்ச்சியாக, சரக்குப் போக்குவரத்துக்காக மாநிலங்களின் எல்லைகளில் இருந்த சுங்கச் சாவடிகள் அனைத்தும் மூடப்பட்டன. எனவே, ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்துக்குப் பொருள்கள் கொண்டு செல்வதற்கு, பொருள்களுக்கான பில்லுடன், இ-வே பில்  வைத்திருக்க வேண்டியது கட்டாயம். அதேபோல மாநிலத்துக்குள் 10 கி.மீ தூரத்துக்கு அப்பால் பொருள்களை எடுத்துச் செல்வோரும் இ-வே பில் வைத்திருக்க வேண்டியது கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. அது என்ன இ-வே பில்?

எப்படிப் பதிவு செய்வது?

ஆன்லைனில் பதிவுசெய்த டிக்கெட்டை நாமே பிரின்ட் எடுத்துக்கொள்வதுபோல, நாமே இந்த இ-வே பில்லை உருவாக்கிக்கொள்ளலாம். இ-வே பில்லை உருவாக்க https://ewaybill2.nic.in/ewbnat3/ என்ற இணையதளத்தில் தகவல்களைப் பதிவுசெய்ய வேண்டும். இந்த இணையதளத்துக்குள் சென்ற பின்னர், இ-வே பில் பதிவுக்கான லிங்க்குக்குச் செல்லவேண்டும். அதில் இ-வே பில் பதிவுக்கான படிவம் வரும். அந்தப் படிவத்தில் ஏற்கெனவே தாங்கள் பெற்றிருக்கும் ஜி.எஸ்.டி எண்ணை உள்ளீடு செய்து க்ளிக் செய்ய வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்