ஆர்.கே.நகர் தேர்தலுக்காக அவசர டெண்டர்!

கைமாறியது 30 கோடி ரூபாய்?

டெண்டரும் கமிஷனும் ஒன்றுடன் ஒன்று ஒட்டிப் பிறந்தவை. அதிகார வர்க்கத்தின் பல்வேறு மட்டங்களில் கறுப்புப்பணம் புழங்குவதற்கு மூலகாரணமாக இருப்பது இந்த கமிஷன்தான். ‘தமிழகத்தில் பல்வேறு பணிகளுக்கு கமிஷன் அடிப்படையில் தான் ஒப்பந்தப்பணிகள் விடப்படுகின்றன’ என்ற செய்தி, நாளை பிறக்கப்போகும் குழந்தைக்குக்கூட தெரியும். ஊழலைத் தடுக்க, வெளிப்படையான ஆன்லைன் டெண்டர் முறை சில ஆண்டுகளாக அமலுக்கு வந்துள்ளது. ஆனால், அதிலும்கூட முறைகேடுகள் நடக்காமல் இல்லை. ‘ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் செலவுகளுக்காக அவசரமாக ஆன்லைனில் டெண்டர் விட்டு, 30 கோடி ரூபாயை கமிஷனாக வாங்கினர்’ எனப் பரபர குற்றச்சாட்டு இப்போது கிளம்பியிருக்கிறது.

சென்னை மாநகராட்சி எல்லைக்குள் இருக்கும் உட்புறச் சாலைகளைப் சீரமைப்பதற்காக, 2017 அக்டோபர் 26-ம் தேதி மாநகராட்சி டெண்டர் விட்டிருந்தது. இதற்கான காலக்கெடு நவம்பர் 10-ம் தேதி என்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது, மூன்று முறை தள்ளிவைக்கப்பட்டு, கடைசியாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த மறுநாளான டிசம்பர் 22-ம் தேதி ஆன் லைன் டெண்டர் விடப்பட்டது. டிசம்பர் 27-ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கெடு விதிக்கப் பட்டிருந்தது. இதில் அடையாறு, பெருங்குடி, சோழிங்கநல்லூர், அண்ணாநகர் உள்ளிட்ட அனைத்து மாநகராட்சி மண்டலங்களிலும் 2,939 சாலைகள் போட டெண்டர் விடப்பட்டது. இந்தப் பணிகளுக்கான டெண்டரின் தோராய மதிப்பீட்டுத் தொகை 175 கோடி ரூபாய்.

‘‘இதற்கான கமிஷன் தொகையாக 30 கோடி ரூபாய் கை மாறியுள்ளது. இந்தத் தொகைதான் ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகிக்கப்பட்டது’’ எனப் பகீர் குற்றச்சாட்டு எழுப்புகிறார்கள் பல கான்ட்ராக்டர்கள். சென்னை மாநகராட்சியில் முதல்வகை ஒப்பந்த தாரராக இருக்கும் மகாதேவன், இந்த டெண்டரை எதிர்த்து நீதிமன்றப் படியேறியிருக்கிறார். அவரிடம் பேசினோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick