ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சம்பாதிக்க... சென்னை வளர்கிறது!

சென்னைப் பெருநகரப் பகுதி (Chennai Metropolitan Area) மற்றும் சென்னை மாவட்டம் ஆகிய இரண்டையும் விரிவாக்கம் செய்து தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போதைய சென்னைப் பெருநகரப் பகுதி என்பது சென்னை மற்றும் சென்னையைச் சுற்றியுள்ள 1,189 ச.கி.மீ பரப்பளவு மட்டும்தான். இதனை இப்போது, 8,878 ச.கி.மீ பரப்பளவாக மாற்ற முடிவெடுத்து, அதற்கான அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இனி சென்னை என்பது காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் முழுமையாகவும், வேலூர் மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், நெமிலி பகுதிகளும் சேர்ந்ததாக விரிவடைந்துள்ளது. இதன்படி, சென்னையில் 1,709 கிராமங்கள் புதிதாக இணையவுள்ளன. இதனால், இந்தியாவில் டெல்லி பெருநகரப் பகுதிக்கு அடுத்தபடியாக, இரண்டாவது மிகப்பெரிய பெருநகரப் பகுதியாக சென்னை ஆகியுள்ளது. 

சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சி.எம்.டி.ஏ.) முன்னாள் தலைமைத் திட்ட அதிகாரி தூயவனிடம் பேசினோம். ‘‘ சென்னையைச் சுற்றி விவசாய நிலங்கள் மாற்றம் அடைந்து, நகர்மயமாதல் அதிகரித்துள்ளது. அதனால், பெருநகரப் பகுதியை விரிவாக்கம் செய்தால், இன்னும் முறையாகத் திட்டமிட முடியும். மக்களுக்கான அடிப்படைத் தேவைகள் அதிகரிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. மத்திய அரசின் மானியம் கிடைக்கும். பாதாளச் சாக்கடை வசதிகள், போக்குவரத்து வசதிகள் அதிகரிக்கும். காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சி.எம்.டி.ஏ அப்ரூவல் வாங்குவதற்கு, தனித்தனியாக மண்டல அலுவலகங்கள் அமைக்க வேண்டும். பெருநகரப் பகுதியின் பரப்பை அதிகரிக்கும்போது, நிலத்தின் விலை அதிகரிக்கும். ஆனால், இது மக்களுக்குப் பாதகமான நிலையை ஏற்படுத்தும். அதேநேரத்தில் பத்திரப்பதிவுக்கான கட்டணம் அதிகரிக்கும். அரசுக்கு வருமானம் அதிகம் கிடைக்கும்” என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick