ஜெ. படத்தை அவசரமாக வைத்த ரகசியம்!

ழக்கு சர்ச்சைகளுக்கு நடுவே இரண்டு முறை முதல்வராகப் பதவியேற்று விமர்சனங்களுக்கு ஆளானவர் ஜெயலலிதா; நீதிமன்றம் குட்டியதாலும், தீர்ப்பு தந்ததாலும் இரண்டு முறை பதவியையும் இழந்தவர் அவர். அப்படிப் பட்ட சர்ச்சைகளுக்கு மத்தியில்தான், இப்போது அவர் உருவப்படமாகவும் தமிழக  சட்டசபைக்குள் நுழைந்திருக்கிறார். காந்தி, ராஜாஜி, திருவள்ளுவர் ஆகியோரின் புகைப்படங்கள் வரிசையில், சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப் பட்ட ஜெயலலிதாவின் புகைப்படம்  ‘அமைதி, வளம், வளர்ச்சி’ என்ற அடைமொழியோடு பதினோராவது புகைப்படமாகவும், முதல் பெண் தலைவரின் படமாகவும் சட்டசபை மண்டபத்தில் இடம்பிடித்துவிட்டது. ஜெயலலிதாவுக்குப் பிடித்த பச்சை வண்ணத்தில் சேலை கட்டிய இந்த உருவப்படம், எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் இருக்கைக்கு நேர் எதிராக வைக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பிறகு, அவர்மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தனி நீதிமன்றம் வழங்கிய நான்கு ஆண்டு தண்டனையை உறுதிசெய்தது உச்ச நீதிமன்றம். இதனால், ஜெயலலிதாவின் படத்தை அரசு சார்பில் பயன்படுத்த முடியாது என்ற நெருக்கடி ஏற்பட்டது. ஆனால், முதல்வராகப் பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி, அரசு அலுவலகங் களில் இருக்கும் ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்ற எந்த நடவடிக்கை யும் எடுக்கவில்லை. மேலும், ஜெயலலிதா வுக்கு நினைவிடம் கட்டுவதாகவும், சட்ட சபையில் அவருடைய உருவப்படத்தை வைக்கப்போவதாகவும் அறிவித்தார் எடப்பாடி.

‘ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்டுவதற்குத் தடைவிதிக்க வேண்டும்’ என்று வழக்கறிஞர் துரைசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். மேலும், ‘சட்டசபையில் ஜெயலலிதாவின் உருவப்படத்தை வைக்கக்கூடாது, அரசு அலுவலகங்களில் இருக்கும் ஜெ. புகைப்படங்களையும் அகற்ற வேண்டும்’ எனவும் அவர் மற்றொரு வழக்கையும் தொடுத்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick