அரசியல் துணுக்குகள்!

மனசில்லாமல் வைத்த முதல்வர் படம்!

.பன்னீர்செல்வத்தின் தர்மயுத்த எபிஸோடில் அவருடைய அணியில் தீவிரமாகச் செயல்பட்டவர் தஞ்சை மாநகராட்சி முன்னாள் மேயர் சாவித்திரி கோபால். இவர் மகன் புவனேஷ் - அபர்ணா திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. திருமணத்துக்கு வந்த பன்னீருக்கு மட்டும் பெரிய அளவில் ஃப்ளெக்ஸ் பேனர்கள் வைத்திருந்தனர். மேடையில் பன்னீர் மற்றும் வைத்திலிங்கம் எம்.பி ஆகியோரின் படங்களை மட்டுமே வைத்திருந்தனர். பிறகு யாரோ சொல்லி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் படத்தை மனசில்லாமல் அவசரக் கோலத்தில் சேர்த்தனர்.

இரவு 7.30 மணிக்கு ஓ.பி.எஸ் வந்தார். வைத்திலிங்கத்தின் ஆதரவாளர்களுடன் ஓ.பி.எஸ் பேசவே இல்லை. ஓ.பி.எஸ் கிளம்பிய பிறகு, இரவு 9.40 மணியளவில்தான் வைத்திலிங்கம் அங்கு வந்தார். ஓ.பி.எஸ்ஸுக்குத் தரப்பட்டதுபோல தடபுடல் வரவேற்பு இவருக்கு இல்லை. எடப்பாடி அணி, ஓ.பி.எஸ் அணி என்று இவர்கள் இன்னும் தனித்தனி அணிகளாகவே இருக்கிறார்கள் என்பதை இங்கு கண்கூடாகக் காண முடிந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick