பொலிட்டிகல் பொடிமாஸ்!

அணு உலை அரசியல்

கூ
டங்குளத்தில் இரு அணு உலைகள் செயல்பட்டு வரும் நிலையில், கூடுதலாக இரு அணு உலைகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெறுகின்றன. இதில், அந்தப் பகுதியினருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவில்லை. அதனால், நெல்லை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த ஒரு கூட்டத்தில் பங்கேற்ற ராதாபுரம் தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ-வான இன்பதுரை, ‘‘கூடங்குளம் அணுமின் நிறுவனத்தில் பணியாற்றும் பொறியாளர் ஒருவர், கேரள எல்லைப் பகுதியில் மனிதவள நிறுவனம் நடத்தி வருகிறார். அவர் கேரளாவைச் சேர்ந்தவர்களை அணு உலைக்கான பணிகளில் சேர்த்துப் பணம் சம்பாதிக்கிறார்’’ எனக் குற்றம் சாட்டினார். அத்துடன், ‘‘கூடங்குளத்தில் அணுமின் திட்டத்துக்காக நிலம் கொடுத்தவர்களில் எத்தனை பேருக்கு அங்கு வேலை தரப்பட்டுள்ளது? அணு உலைக்கு நிலம் கொடுத்த ஏழை விவசாயிகள் பாதிக்கப்படும் நிலைமை தொடருமானால், நானே தலைமையேற்று போராட்டம் நடத்துவேன்’’ என்று சொல்லி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இதனிடையே, இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி அணு உலை வளாகம் எதிரில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ-வான அப்பாவு அறிவித்தார். இந்த அணு உலை அரசியல், நெல்லை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick