அம்மா பேப்பர்... நியூஸ் ஜெ! | ADMK launch new Daily Magazine on February 21 - Junior vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/02/2018)

அம்மா பேப்பர்... நியூஸ் ஜெ!

களமிறங்கும் எடப்பாடி அணி

.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேடாக இதுவரை இருந்துவந்த ‘டாக்டர் நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழுக்குப் பதில், இனி ‘நமது புரட்சித் தலைவி அம்மா’ இருக்கப்போகிறது. இந்தப் புதிய நாளிதழுக்கான அறிவிப்பை அதிரடியாக வெளியிட்டுள்ளது, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு.

‘நமது எம்.ஜி.ஆர்’ நாளிதழ் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்டாலும், அந்த நாளிதழின் வெளியீட்டாளர் என்ற பொறுப்பு சசிகலாவின் வசமே இருந்தது. நாளிதழின் கட்டுப்பாட்டை சசிகலாவுக்கு நெருக்கமானவர்களே கையில் வைத்திருந்தனர். அதேபோல, ஜெயா டி.வி-யும் சசிகலாவின் உறவினர்கள் பெயர்களில் பதிவுசெய்யப்பட்டு அவர்கள் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. சசிகலா சிறைக்குச் சென்றபிறகு, இரண்டையும் இளவரசியின் மகன் விவேக் ஜெயராமன் கவனித்துவருகிறார்.