எம்.ஜி.ஆர் பேரைச் சொல்லி ஏப்பம்?

பதில் சொல்லத் தேவையில்லை என்கிறார் அமைச்சர்

மிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் நடைபெற்ற எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்கள் குறித்து இத்தனை நாள்களாக எழுந்த அத்தனை சர்ச்சைகளையும் அடித்துச் சாய்க்கும் அளவுக்குப் புறப்பட்டிருக்கிறது ஒரு புதிய சர்ச்சை. ‘எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்கள் எந்தப் பணத்தில் நடக்கின்றன, யார் நடத்து கிறார்கள்...’ என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கேட்கப்பட்டதற்குக் கிடைத்துள்ள பதிலில் முளைத்துள்ள இந்த சர்ச்சை, பல சந்தேகங்களை எழுப்பியுள்ளது.

எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறது அ.தி.மு.க அரசு. கந்துவட்டிக் கொடுமையால் நெல்லையில் இசக்கிமுத்து தன் குடும்பத்துடன் தீக்குளித்தபோதும், ஒகி புயலில் கன்னியாகுமரி மக்கள் சிக்கித் தவித்தபோதும், கோவையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக சாலையை மறைத்து அமைக்கப்பட்ட அலங்கார நுழைவு வாயிலால் விபத்தில் சிக்கி ரகு என்ற இளைஞர் பலியானபோதும், அ.தி.மு.க அரசுக்கு எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டம்தான் முக்கியமாக இருந்தது.  ‘‘இதையெல்லாம் எம்.ஜி.ஆரைக் கொண்டா டுவதற்காக செய்தார்களா அல்லது
எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்லி சம்பாதிப்பதற்காகச் செய்தார்களா என்று இப்போது சந்தேகமாக இருக்கிறது’’ என்கிறார் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் லோகநாதன். இவர், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா குறித்து ஒவ்வொரு மாவட்ட நிர்வாகத்திடமும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் தகவல்களைப் பெற்றுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்