மிஸ்டர் கழுகு: ஸ்டாலின் ரகசியமும் வைகோ பிரகடனமும்!

“அ.தி.மு.க தலைமைக்கழகத்தில் இருக்கிறேன். போட்டோகிராபரை அனுப்பி வைக்கவும்’’ என்று செய்தி அனுப்பினார் கழுகார். அடுத்த அரை மணி நேரத்தில் நம்முன் ஆஜரானார் கழுகார்.

‘‘அ.தி.மு.க. தலைமைக்கழகத்தில் என்ன விசேஷம்?” என்றோம்.

“ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ம் தேதி, அவரது உருவச்சிலை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் திறக்கப்பட உள்ளது. திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை பகுதியில் தயாரிக்கப்பட்ட இந்தச் சிலை, இரண்டு மாதங்களுக்கு முன்பே சென்னை வந்துவிட்டது. தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர் சிலை அளவுக்கே ஜெயலலிதாவின் சிலையும் வைக்கப்பட உள்ளது. சிலையில் கண் பகுதி சரியாக அமையவில்லையென்று, தயாரித்த இடத்துக்குச் சிலையை மீண்டும் எடுத்துச் சென்றனர். ஓரிரு தினங்களில் சரிசெய்யப்பட்டு, மீண்டும் சென்னை வர உள்ளது. சிலையை முதல்வர் பழனிசாமி திறந்து வைக்கவுள்ளார்.”

‘‘சசிகலா சிறைக்குச் செல்வதற்கு முன்பே ஜெயலலிதாவுக்குச் சிலை வைப்பதற்கான வேலை நடந்ததே?”

‘‘ஆமாம். சிலைகூட தயார் செய்யப்பட்டது. தலைமை அலுவலகத்தில் வைக்கும் சிலையைப் போலவே, மாவட்டம்தோறும் சிலை வைப்பதற்கும் முடிவானது. சசிகலா சிறைக்குச் சென்றதால், அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. சசிகலா தரப்பு உருவாக்கிய சிலையை நிராகரித்த எடப்பாடி தரப்பு, புதிதாக சிலைக்கு ஆர்டர் கொடுத்தது.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick