மீண்டும் ராஜபக்சே!

விஸ்வரூபம் எடுக்கவைத்த உள்ளாட்சித் தேர்தல்

ழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த குற்றச்சாட்டுக்கு ஆளான முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, கிட்டத்தட்ட அரசியலிலிருந்தே ஒதுக்கப்பட்டிருந்தார். ஆனால், இப்போது இலங்கையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலின் மூலம் மீண்டும் அவர் அரசியலில் முக்கிய இடம் பிடித்திருப்பது அங்கு பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

இலங்கையின் அனைத்து மாகாணங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி 10-ம் தேதி நடந்தது. கூட்டு அரசாங்கத்தின் மூலம் நாட்டை ஆளும் அதிபர் மைத்திரிபால சிறிசேனா தரப்பும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தரப்பும் தனித்தனியாகப் போட்டியிட்டன. தன் கட்சியை மைத்திரிபாலவிடம் பறிகொடுத்திருந்த ராஜபக்சே தரப்போ, முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் உருவாக்கிய சிறிலங்கா பொதுஜன முன்னணி எனும் புதிய கட்சியின் பெயரில் போட்டியிட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்