கம்பேரிஸன் கோவாலு! | Funny Comparison between various political parties - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/02/2018)

கம்பேரிஸன் கோவாலு!

‘‘காவியை எதிர்த்து அரசியல் செய்தால் ரஜினியோடு சேருவேன்’’ எனச் சொல்லியிருக்கிறார் கமல். இன்னொரு பக்கம், ‘‘அடுத்தத் தேர்தலில் தி.மு.க-வை வெல்ல வைத்தே தீருவேன்’’ எனப் பொங்கியிருக்கிறார் வைகோ. ஹரி படம் போல இருந்த அரசியல் காட்சிகள், சட்டென ‘லாலாலாலா’ என விக்ரமன் மோடுக்கு மாறியிருக்கிறது. இந்த நிலை தொடர்ந்தால்..?

பா.ம.க - ரஜினி

கருணாநிதி, ஜெயலலிதாவுடன் எல்லாம் ஒருகாலத்தில் மோதிக்கொண்டிருந்த சின்னய்யா, ஓவியாவுக்கு விழுந்த ஓட்டுகளுக்காக மல்லுக்கட்டியதெல்லாம் காலத்தின் கோலம். இப்போது, அநேகமாக ப்ரியா வாரியரைப் பார்த்துப் பொறாமைப்படக்கூடும். இப்படி ‘வளரும் கலைஞர்களுடன்’ போராடுவதற்குப் பதில், பழைய பகையை மறந்து ரஜினியுடன் கூட்டுச் சேர்ந்தால், துணை முதல்வர் பதவி கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆமா, அதுக்கு முதல்ல ரஜினிக்கு முதல்வர் பதவி கிடைக்கணும்ல!

[X] Close

[X] Close