வயது 30... மனைவிகள் 6 - கம்பி எண்ணும் கல்யாண மன்னன்! | Another TN man marries and cheats six women - Junior Vikatan | ஜூனியர் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/02/2018)

வயது 30... மனைவிகள் 6 - கம்பி எண்ணும் கல்யாண மன்னன்!

கோவை புருஷோத்தமனைத் தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் ஒரு கல்யாண மன்னன் போலீஸில் சிக்கியிருக்கிறார். “ஒரு பெண்ணைத் திருமணம் செய்தால், அந்தப் பெண்ணுடன் இரண்டு வருடங்களுக்கு மேல் வாழமாட்டான். ஆசை தீர அனுபவித்துவிட்டு, இரண்டு குழந்தைகளையும் கொடுத்துவிட்டு, எஸ்கேப் ஆகிவிடுவான். பூப்பெய்தாத ஒரு பெண்ணைக்கூட தன் வலையில் வீழ்த்தி அனுபவித்திருக்கிறான்” என வேலூர் கல்யாண மன்னனைப் பற்றி கதை கதையாகச் சொல்கிறார்கள் போலீஸார்.

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு. இவரது முதல் திருமணம் 19 வயதில் நடந்துள்ளது. அதே ஊரைச் சேர்ந்த பரிமளா, உமாராணி ஆகிய இரண்டு பெண்களைத் திருமணம் செய்த பாபு, ராமநாயிணி குப்பத்தைச் சேர்ந்த துர்கா, குடியாத்தத்தைச் சேர்ந்த பாலாமணி, வேலூரைச் சேர்ந்த பாரதி மற்றும் பூப்பெய்தாத ஒரு மாணவி என 30 வயதுக்குள் ஆறு பெண்களைத் திருமணம் செய்துள்ளார்.

அகரம் கிராமத்துக்குச் சென்றோம். அங்கு எதிரே வந்த ஒருவரிடம் பாபு பற்றி விசாரித்தபோது, “பொம்பள விஷயத்துல  அவன் ரொம்ப மோசம். அதனால அவனை, ‘காளை’ன்னுதான் எல்லோரும் கூப்பிடுவாங்க. ஆளு லட்சணமா இல்லைன்னாலும், பேச்சில் ரொம்பக் கில்லாடி. பேசிப் பேசியே பொண்ணுங்களை மயக்கிடுவான். இதுவரை ஆறு பொண்ணுங்களைக் கல்யாணம் செஞ்சிருக்கான். அதுபோக, கல்யாணமான பல பெண்கள்கிட்ட சகவாசம் வெச்சிருந்தான். அவன் செஞ்ச அக்கிரமங்களால எங்க ஊருக்கே கெட்ட பெயர். அவனை இப்போ போலீஸ் பிடிச்சிட்டதா கேள்விப்பட்டோம். இப்பதான் நிம்மதியா இருக்கு” என்றார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க